பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. இது தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரணையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு, ஓய்வூதிய பலன் வழங்கப்படவில்லை என, குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்து, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்கள் குறித்த விபரம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை, அறிக்கையாக அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.