தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2௨' முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அதிகாரி,
ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'குரூப் - ௨' தேர்வில் அடங்கிய, துணை வணிகவரி அலுவலர், சார் - பதிவாளர் நிலை - ௨ உட்பட, 18 வகை பதவிகளில், 1,094 காலியிடங்களை நிரப்ப, 2016 ஆக., 21ல், தேர்வு நடந்தது. இதில், 9,833 தேர்வர்கள் பங்கேற்றனர்.
இவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 2,169 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு, அக்., 20 முதல், நவ., 3 வரை தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தேர்ச்சி பெற்றவர் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணைய தளத்தி-ல் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இது தவிர, வேறு மூன்று தேர்வுகளுக்கான முடிவுகளையும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்கள் சார்நிலை பணியில், பரிசோதகர், உதவி பரிசோதகர் பணியில், ஆறு காலியிடங்களுக்கு, ஜூன், ௨௦௧௬ல் தேர்வு நடந்தது.
இதில், ௨௩௬ பேர் பங்கேற்றனர். இதில், தேர்ச்சி பெற்ற, ௧௮ பேருக்கு, அக்., ௧௦ல், நேர்காணல் தேர்வு நடக்க உள்ளது.
தமிழக வேலை வாய்ப்பு துறையில், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவியில், ௨௭ காலியிடங்களுக்கு, இந்தாண்டு, ஜூன், ௨௦ல் தேர்வு நடந்தது; ௧,௭௭௯ பேர் பங்கேற்றனர்.
இதில், தேர்ச்சி பெற்ற, ௫௯ பேருக்கு, அக்., ௯ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.
தமிழ்நாடு எழுது பொருள் அச்சுப்பணி உதவி மேலாளர் பணியில், மூன்று இடங்களுக்கு, இந்தாண்டு, ஜூன், ௨௫ல், தேர்வு நடந்தது. இதில், ௧௫௯ பேர் பங்கேற்றனர்; ஏழு பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களுக்கு, அக்.,௯ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.