வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின்
அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 7 - ஆம் தேதியில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் அந்த போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அவர்கள் அலுவலகத்துக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தை அங்கீகரிக்கப்படாத விடுப்பாக எடுத்துக் கொண்டு, அந்த நாட்களுக்கான சலுகை, ஊதியம் ஆகியவற்றை வழங்கக் கூடாது என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்காலமாக ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 'போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டும். அந்தப் போராட்ட நாள்களை சனிக்கிழமைகளில் பணிப்புரிந்து ஈடுகட்டுவதற்குத் தயாராக உள்ள ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்று தலைமைச் செயலாளர் அளித்த உத்தரவாதம் பதிவு செய்யப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, ஏற்கெனவே உத்தரவிட்டப்படி மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் வேலை பார்த்து, பணிக்கு வராத நாட்களை ஈடுகட்டுவதாக ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்துக்கு வராமலிருந்த நாட்களுக்கும் ஊதியத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும்.
சனிக்கிழமை, விடுமுறை நாட்களில் அவர்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தனது கடிதத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.