WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 9, 2017

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்.

தனியார் பள்ளி ஆசிரியர் களும், ௨௦௧௯க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார். 'தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், ௨௦௧௧ முதல், அனைத்து புதிய ஆசிரியர் களும், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், ௨௦௧௦ல், வெளியிட்ட அறிவிப்பில், 'புதிய நியமனங்களிலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும்' என, தெரிவித்தது. 'தகுதி தேர்வால், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படும்' என, சிறுபான்மை நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.