WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 9, 2017

ஸ்டிரைக்' நாட்களை ஈடுகட்ட 9 வாரம் சனியன்றும் வகுப்பு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், ஒன்பது வாரம், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, செப்.,ல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. அதனால், பள்ளிகள் இயங்காமல் பாதிக்கப்பட்டன. பல பள்ளிகள் திறந்திருந்தாலும், தலைமை ஆசிரியர் முதல், வகுப்பு ஆசிரியர் வரை,'ஸ்டிரைக்'கில் பங்கேற்றதால், வகுப்புகள் நடைபெறவில்லை. இந்நிலையில், ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுகட்டி, வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் முதல், டிச., வரை, ஒன்பது சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள், உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.