தமிழ்நாட்டில் அரசு கலைக் கல்லூரியில் 1070 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு 2013 ல் வெளியிடப்பட்டு 2015 ல்
பணி நியமனம் நடந்தது. இந்த பணி நியமனத்தில் செட் நெட் முடிக்காமல் வெறும் பி.எச்டி கல்வி தகுதியுடன் மட்டும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ( 2009 ரெகுலேசன் படி பி.எச்டி பட்டம் பெறாமல் ) சேர்ந்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் 8-11-2017 ல் வழங்கிய தீர்ப்பு அமைந்துள்ளது. இது சம்பந்தமாக பல்வேறு RTI பதில்களை யுஜிசி தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் கல்லூரி கல்வி இயக்குனரின் RTI பதில்கள் , TRB செயலாளரின் பதில்கள் மற்றும் ஏற்கனவே பல்வேறு பல்கலை கழகத்தில் இருந்து 2009 ரெகுலேசன் பி.எச்டி சம்பந்தமாக அளிக்கப் பட்ட தீர்ப்புக்களால் தமிழக உயர்கல்வி துறையில் சிக்கல் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பல்கலை கழகமும் 2009 ரெகுலேசன் பி.எச்டி பட்டபடிப்பை எந்த ஆண்டு அமல் படுத்தி வழங்கியுள்ளது என பெறப்பட்ட RTI பதில்களால் TRB சிக்கலிலும், அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் காலி பணியிட அறிவிப்பினை வெளியிடுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் 2009 Regulation படி பி.எச்டி பட்டம் பெறாமல் குறிப்பிட்ட பல்கலை கழகங்களில் அந்த Regulations ஐ அமல்படுத்துவதற்கு முன் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் கட்டாயம் செட் அல்லது நெட் தேர்ச்சி அவசியம் என 16.3.2015 சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. K. செல்வராஜ் என்ற வழக்கறிஞர் RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி தமிழகத்தில் 2009 Regulation பி.எச்டி யை சென்னை பல்கலை கழகம் 1.7.2010 லும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 23.4.2013 லும் மனோன்மனியம் பல்கலைக்கழகம் 5.11.2009 லும் அழகப்பா பல்கலைக்கழகம் 3.11.2011லும் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஜீன் மாதம் 2009 லும் நடைமுறை படுத்தியுள்ளது.எனவே மேற்குறிப்பிட்ட தேதிக்கும் முன் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 2009 Regulations நடைமுறை படுத்துவதற்கு முந்தைய தேதியில் பி.எச்டி பட்டம் பெற பதிவு செய்தவர்கள் கட்டாய செட் நெட் அவசியம் என UGC யும் உச்சநீதி மன்றமும் எச்சரித்துள்ளது.ஆனால் தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள Teacher Recruitment board -ம் கடந்த முறை போல் உதவி பேராசிரியர் நியமனத்தை விதிகளை மற்றும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி தேர்வு செய்யும் முறை இல்லையெனில் அரசு அதிகாரிகள் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சந்திக்க நேரிடும் என தமிழக கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நன்றி
ReplyDeleteநெட் முடித்து ஆறு வருடம் பனி அனுபவம் அதற்கு ஏதும் வாய்ப்பிருக்கிறதா ஐயா
ReplyDeleteSeniorty நல்லது
ReplyDeleteடி.ஆர்.பி எப்பொழுது வரும்
ReplyDelete