WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 11, 2018

நாளை முதல், 'லீவ்' மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'.


பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கூடுதலாக, ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொங்கல்,
மாட்டு பொங்கல் என கூறப்படும், திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் என்ற உழவர் திருநாள் என, மூன்று நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த ஆண்டு, 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அரசின் விடுமுறை பட்டியலின்படி, ஜன., 14 முதல், 16 வரை, மூன்று நாட்களுக்கு, பள்ளிகள் விடுமுறை என, அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், பஸ் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், குறித்த நேரத்தில், பொங்கல் பண்டிகைக்கு செல்ல முடியுமா என, பலர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அவர்கள்முன்கூட்டியே ஊருக்கு செல்லும் வகையில், பள்ளிகளுக்கு, நாளை ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்த உத்தரவில், 'பள்ளி மாணவர்கள், பெற்றோருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி, இளம் வயது முதல், தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணி காக்கும் வகையில், சிறப்பு நிகழ்வாக, ஜன., 12ல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.