WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 13, 2018

தொலைநிலை கல்வியில் 'ஆன்லைன்' கட்டணம்.

தொலைநிலை கல்வி படிப்புக்கு, 'ஆன்லைனில்' கட்டணம் செலுத்தலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

சென்னை பல்கலையின் தொலைநிலை படிப்பில் சேரும் மாணவர்களிடம், வங்கிகள் வாயிலாக, கல்வி மற்றும் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், பல நேரங்களில், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து, 'ஆன்லைன்' கட்டண முறையை, சென்னை பல்கலை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, தொலைநிலை கல்வி பொறுப்பு இயக்குனர், கருணாநிதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தொலைநிலை கல்வியில், ஏ 15, சி 16, ஏ 16, சி 17, ஏ 17 ஆகிய பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கான கல்வி கட்டணங்களை, ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. 
மாணவர்கள், www.ideunom.ac.in, www.unom.ac.in என்ற, இணையதளத்தில் கட்டணம் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.