மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) மாணவர் மதிப்பீட்டு பிரிவு பதிவாளராக பேராசிரியர் வி.வேணுகோபால் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் பல்கலைக்கழக மண்டல பணிகள் பிரிவின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கான தேர்வுக்கால அட்டவணையை இறுதி செய்வது, தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியிடுவது, மதிப்பெண் சான்றிதழ், பட்டச்சான்றிதழ் வழங்குவது, பட்டமளிப்பு விழா ஏற்பாடு என அனைத்து முக்கிய பணிகளையும் மாணவர் மதிப்பீட்டு பிரிவுதான் மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரிவின் புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் வேணுகோபால் ரெட்டி, தொலைதூரக்கல்வியில் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். அவர் இக்னோ மண்டல இயக்குநராக பல்வேறு மண்டலங்களில் பணியாற்றிய காலத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இக்னோ கல்வி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.