WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 13, 2018

திருவள்ளுவர் பல்கலையில் 1 லட்சம் விடைத்தாள் மாயம்.

திருவள்ளுவர் பல்கலையில், ஒரு லட்சம் விடைத்தாள்கள் மாயமானதாக, பேராசிரியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். வேலுார், திருவள்ளுவர்பல்கலையின் கட்டுப்பாட்டில், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களில், 128 கலைக் கல்லுாரி கள், ஆறு உறுப்பு கல்லுாரிகள் உள்ளன.

புகார் : இதில், 1.50 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 2017 டிச., 20ல், செமஸ்டர் தேர்வுகள் நடந்தன; விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. இந்நிலையில், ஒரு லட்சம் விடைத்தாள்கள் மாயமானதாக, பேராசிரியர்கள் புகார் செய்தனர்.
இது குறித்து, பல்கலை ஆசிரியர்கள் சங்க மூன்றாவது மண்டல செயலர், சாந்தி, நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவர் பல்கலையில், கடந்த மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்காக, எட்டு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. இதில், இளங்கலை ஆங்கிலம், 40 ஆயிரம், முதுகலை ஆங்கிலம், 15 ஆயிரம், இளங்கலை தமிழ், 30 ஆயிரம், முதுகலை கணிதம், 5,000, இளங்கலை வரலாறு, 10 ஆயிரம் என, மொத்தம், ஒரு லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இந்த விடைத்தாள்கள் என்னவானது; எங்கு போனது என, தெரியவில்லை. இதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. இதற்கு, பல்கலை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

அரசுக்கு விளக்கம் : திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர், முருகன் கூறியதாவது:பல்கலைக் கழகத்தில் இருந்து, விடைத்தாள்கள் எதுவும் மாயமாக வாய்ப்பில்லை. பேராசிரியர்கள் எழுப்பிய புகார் குறித்து, அரசுக்கு விளக்கம் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், பல்கலை முறைகேடுகளை கண்டித்து, பல்கலை ஆசிரியர் சங்க மூன்றாவது மண்டலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சார்பில், சேர்க்காட்டில் உள்ள, பல்கலை அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.