WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 26, 2018

பல்கலை பெயரில் 78 போலி சான்றிதழ் .

''டில்லி, மும்பையில் உள்ள பல்வேறு பல்கலையில் இருந்து, ஆய்வுக்கு வந்த சான்றிதழ்களை சரி பார்த்ததில், திருவள்ளுவர் பல்கலை பெயரில், 78 போலி சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளது,'' என, திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன் கூறினார்.அவரது பேட்டி:திருவள்ளுவர் பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீடு சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் கல்வியாண்டில், 10 புது பாடத்திட்டங்கள் துவங்கப்படும். டில்லி, மும்பையில் இருந்து, ஆய்வுக்கு வந்த திருவள்ளுவர் பல்கலை சான்றிதழ்களை சரிபார்த்ததில், 78 போலிச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளன.பல்கலையில், 70 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாகவும், 30 கோடி ரூபாய்க்கு விளக்கம் கேட்டும், தணிக்கை குழுவினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். விரைவில், தணிக்கை குழுவிடம், கணக்கு விபரம் சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.