WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 4, 2018

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்: அலுவலகங்கள் வெறிச்.

பழைய ஓய்வூதியம்; அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; அரசாணை 56, 100 மற்றும் 101ஐ ரத்து செய்து, பழைய நிர்வாக நடைமுறையை பின்பற்ற வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ -ஜியோ' அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.தொடர் போராட்டம் நடத்தியும், அரசு நிர்வாகம் கண்டு கொள்ளாததை கண்டித்து, இன்று ஒரு நாள், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் எடுத்து போராட்டம் நடத்தினர். 
அனைத்து மாவட்டங்களிலும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆசிரியர்கள் வராத காரணத்தினால், பல பள்ளிகள் பூட்டப்பட்டன. மாணவர்களும், ஆசிரியர் வராத காரணத்தினால், வகுப்பறைக்கு வெளியே வந்து விளையாடி கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.