பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதை உடனே வழங்கிட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அதற்கு முன்னோட்டமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதையும் மீறி இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஊதிய உயர்வை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.