WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 30, 2018

இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தல்.

குரூப் 1 தேர்வு தொடர்பாக, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் 1-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 19-இல் நடத்தப்பட்டது. அதற்கான முடிவு ஜூலை 21-இல் வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வுகள் அக்டோபர் 13-இல் தொடங்கி 15 வரை நடந்தது. 
இதற்கான தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட முடிவு செய்யப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருகிறது. எனவே, தேர்வர்கள் அது குறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும் ஏமாற்றுவோர் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.