WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 26, 2018

உயர்கல்வி முறைகேடுகளை மூடி மறைக்க பொய்யான தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் முதல் சுழற்சியில் 1831பேரும், இரண்டாம் சுழற்சியில் 1661 பேரும் கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாகவும் , 38 பேர் கல்வியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக இரண்டாம் சுழற்சியில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் அவ்வளவாக இதுநாள் வரை பாதிப்பட்டதில்லை. ஆனால் முதல் சுழற்சியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மட்டும் நிரந்தர பேராசியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டாலோ அல்லது ஒரு கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் வேறு கல்லூரிக்கு ஆகி ( transfer) பணிமாறுதலில் வந்தாலோ அங்கு பணிபுரியும் ( இதற்குமுன்பு முதல் சுழற்சியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மட்டும்) கௌரவ விரிவுரையாளர்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டும். தற்போது கல்லூரியில் உள்ள ஒரு குறிப்பிட்டத் துறையில் உள்ள இடம் காலியானால் I&II சுழற்சியில் யார் குறைவான அரசு கல்லூரி பணி ( government experience only) அனுபவம் பெற்றவரோ அவர்தான் வெளியேற வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தற்போது புதியதாக ( சென்ற ஆண்டு ) அரசாணை வெளியிட்டது. இது கௌரவ விரிவுரையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் யுஜிசி கல்வி தகுதியுடன் (நெட் செட் பிஎச்டி) குறைவான பணிஅனுபவம் கொண்டவராக ஒருவர் பணிபுரிந்து வந்தாலும் , யுஜிசி கல்வித்தகுதி இல்லாமல் அதிக அரசுக் கல்லூரி பணி அனுபவத்துடன் பணிபுரிந்தாலும் ,ஒருவரை நீக்கும் போது யுஜிசி தகுதி இல்லாத நபரை ( அதிக பணி அனுபவம் கொண்டவராக இருப்பினும்) பணயில் இருந்து நீக்கியுள்ளது கௌரவ விரிவுரையாளர்கள் மத்தியில் வரவேற்க தக்கது தான். ஆனால் தற்போது பணிமாறுதலாலும் யாரும் அந்த பணியிடத்திற்கு வரவில்லை, புதியதாக நிரந்தர பேராசியர்களும் பணியமர்த்தாத சூழலில் திடீரென ஒரு சில கல்லூரிகளில் விதிக்கு புறம்பாக நீக்கப் பட்டுள்ளனர். அதில் கடலூர் பெரியார் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி துறையில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு என மொத்தம் 155 பேர் பயிலும் துறையில் நிரந்தர பேராசியர்களும் இல்லை. ஆயினும் வெறும் இரண்டே இரண்டு கௌரவ விரிவுரையாளர்கள் மட்டும் பணியாற்ற அனுமதி 4.10.18 ல் வந்துள்ளது.ஆனால் சென்ற வருடம் அதே துறையில் 3 கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர் என்பது கவனிக்கதக்கது. கும்பகோணத்தில் லியோ நிர்மலா,ராஜா என்ற இரு கௌரவ விரிவுரையாளர்கள் அதிக அரசு கல்லூரி பணி அனுபவம் பெற்று இருந்த சூழலில் தனியார் கல்லூரி பணி அனுபவம் , குறைந்த பணி அனுபவம் பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு விதியை மீறி பணி வாய்ப்பினை அளித்துள்ளனர். அதே போல் அதிக அரசு கல்லூரி பணி அனுபவம் பெற்ற வணிகவியல் துறை மகளிர் கௌரவ விரிவுரையாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். மன்னார்குடியில் 13 பேர் இருக்க வேண்டிய தமிழ் மற்றும் ஆங்கில துறைகளில் முறையே 8 பேர் & 7 பேர் மட்டும் பணியாற்ற அனுமதி வந்துள்ளது. இதனால் 4 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிழந்துள்ளனர். பர்கூர் கல்லூரியில் 4 பேரும், சிதம்பரம், சீர்காழி் ,விருத்தாசலம் மற்றும் இது போல பல கல்லூரிகளில் 40க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.இந்த பணிநீக்கம் செய்யப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை பணிபுரிந்தமைக்கு இன்னும் சம்பளம் தரவி்லை. பாதிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் ஊடகத்தின் வழியாக நீதி கேட்டபின் 5 மாதம் பணிபுரிந்தமைக்கு சம்பளம் தர 25.10.18 அரசாணை அனுப்பப் பட்டது. அந்த அரசாணையில் பணிவாய்ப்பு இழந்தமைக்கு காரணம் "காலி பணியிடம் இல்லை" என்ற பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது. இதனை கடலூர் பெரியார் கல்லூரி ( மைக்ரோ பயாலஜி), பர்கூர் மகளிர் கல்லூரி ( தமிழ் & ஆங்கிலத்துறை) , மன்னார் குடி கல்லூரி ( தமிழ் & ஆங்கிலத்துறை) போன்ற கல்லூரிகளின் கல்லூரி கையேட்டினை புரட்டிப் பார்த்தால் கல்வி ஆர்வலர்கள் உண்மைதன்மையை தெரிந்துக் கொள்ளலாம்.மேலும் இது போன்று விதிமுறையை மீறி பணிநீக்கம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைப் பெற்றுள்ளதாகவும், அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாக கௌரவ விரிவுரையாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக தமிழக முதல்வர மற்றும் தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.