WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 27, 2018

திருவள்ளுவர் பல்கலைக்கு நிதி ஒதுக்கீடு.

''திருவள்ளுவர் பல்கலைக்கு, 11.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்,'' என, பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் பேசினார்.வேலுார், திருவள்ளுவர் பல்கலை, 14 வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. துணைவேந்தர் முருகன் தலைமை வகித்தார்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், 39 ஆயிரத்து, 371 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கினார். உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:திருவள்ளுவர் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 130 கல்லுாரிகளில், 1.55 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில், 76 புதிய கல்லுாரிகள், ஐந்து பலவகை தொழில்நுட்ப கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.உயர் கல்வி தரத்தை, 2020ம் ஆண்டுக்குள், 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால் தமிழக அரசு, 2017-18ம் ஆண்டிலேயே, 48.4 சதவீதம் உயர்த்தி சாதனை படைத்துள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.திருவள்ளுவர் பல்கலைக்கு, 11.80 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய, முதல்வர் பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.