WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 2, 2018

தீபாவளியன்று தமிழகத்தில் காலை 6-7, இரவு 7-8 பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு .


crackers-11
தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.



இத்தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் பா. வினோத் கன்னா, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்கம் கோரும் மனுவில் பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்ப்பாட்டால் பட்டாசு வெடிக்கும் உரிமையை தமிழக மக்கள் இழந்துள்ளனர். எனவே, தீபாவளியின்போது, அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.


தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணன், மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே, வழக்குரைஞர் பா. வினோத் கன்னா ஆகியோர், காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் தென் மாநிலங்களில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு வெடிக்கப்படும் நேரத்தை தென் மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பட்டாசு வெடிக்கும் நேர அளவை அதிகாலைக்கு மாற்றி தமிழக அரசு இன்று வெள்ளிக்கிழமை (நவ.2) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம் என்றும் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் திறந்த வெளியில் ஒன்று கூடி பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுதளங்களின் அருகில் பட்டாசு வெடிப்படை தவிர்க்கலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.