WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 11, 2018

7 ஆண்டுகளுக்கு பின் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி இயக்குனர் நியமனம்!

சென்னை பல்கலையில், ஏழு ஆண்டுகளுக்கு பின், தொலைநிலை கல்விக்கு, இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் புதிதாக நியமிக்கப்பட்டுஉள்ளார்.



தமிழகத்தில் ஒன்பது பல்கலைகளில், பதிவாளர் பணியிடங்கள் காலியாகஉள்ளன. அதேபோல், தேர்வு கட்டுப்பாட்டுஅதிகாரி பதவியும், பல பல்கலைகளில்காலியாக உள்ளன.சேர்க்கைசரிவுசென்னை பல்கலையில், தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி மற்றும்தொலைநிலை கல்வி இயக்குனர் பதவி, பல ஆண்டுகளாக காலியாகஇருந்தன.இதில், தொலைநிலை கல்விஇயக்குனர் பதவி, ஏழு ஆண்டுகளாக காலியாக இருந்தது. இந்த பதவியை நிரப்புவதில், அரசியல் தலையீடுகள் இருந்ததால், பணி நியமனம் தொடர்ந்து தள்ளி போனது.இந்தபிரச்னையால், சென்னை பல்கலைக்கு தொலைநிலை கல்விக்கான அனுமதியை வழங்க, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யும் இழுத்தடித்தது.

நடப்பு கல்வி ஆண்டில், தொலைநிலை கல்வியில் தாமதமாக அனுமதி பெற்ற, சென்னைபல்கலையில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது.கட்டணம்உயர்வுஇந்நிலையில், சென்னை பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், துணைவேந்தர்துரைசாமி தலைமையில், பதிவாளர், சீனிவாசன் முன்னிலையில், நேற்று நடந்தது.இந்தகூட்டத்தின் முடிவுப்படி, தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரியாக பணியாற்றிய, ரவிச்சந்திரன், தொலைநிலை கல்வி இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

அதேபோல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிக்கு, சென்னை பல்கலையின் வேதியியல்பேராசிரியர், பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு சிண்டிகேட்டில் ஒப்புதல்அளிக்கப்பட்டது. சென்னை பல்கலையின் இணைப்பில் உள்ள, சிறுபான்மை கல்விநிறுவனங்களில், முதல்வர்களை, கல்லுாரி நிர்வாகமே தேர்வு செய்து கொள்ள, அனுமதிஅளிக்கப்பட்டது. அதேபோல், தன்னாட்சி மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பட்ட சான்றிதழுக்கான கட்டணம், 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

உயர்கல்வி செயலர் புறக்கணிப்புசென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலையில், நேற்று சிண்டிகேட் கூட்டம் நடந்தது. இதில், உயர்கல்வி செயலர் பங்கேற்க வேண்டும். ஆனால், சென்னை பல்கலையில், இணை செயலர் கோபால் பங்கேற்றார். அண்ணாபல்கலையில், உயர்கல்வி செயலர், மங்கத்ராம் சர்மா பங்கேற்பதாக இருந்தார்.

ஆனால், அவர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, உயர்கல்வி துறை வட்டாரத்தில்விசாரித்த போது, &'பல்கலைகளின் நிர்வாகத்தினருக்கும், உயர்கல்வி செயலகத்துக்கும்இடையே, கருத்து முரண்பாடுகள் உள்ளதால், உயர்கல்வி செயலர் சிண்டிகேட்கூட்டத்தை புறக்கணித்திருக்க வாய்ப்புள்ளது&' என, தெரியவந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.