WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 14, 2018

கஜா புயல்: 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.

கஜா புயல்,Storm,Weather,புயல்,மழை,வானிலை



கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், கஜா புயல் தற்போது நாகப்பட்டினம் வடகிழக்கே சுமார் 790 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (நவ.,15) பாம்பனுக்கும் கடலூருக்கு இடையே கரையை கடக்கும். 
அப்போது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும். 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். 100 கி.மீ., வேகத்தில் கூட காற்றுவீசக்கூடும். 15ம் தேதி காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். சென்னையில் 15 மற்றும் 16 ம் தேதிகளில் ஓரளவு மிதமான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

கடிதம்

இந்நிலையில், மத்திய நீர் வள ஆணையம், தலைமை செயலர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிள்ளது.அதில், மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளதால், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வேகமாக நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால், அனைத்து அணைகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.