'தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், 809 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது' என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள், டிச., 10ல், துவங்கும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது. ஆனால், 750 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு, ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை.
கடந்த, 2016 - 17ம் ஆண்டு வரை, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், 809 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அங்கு கம்ப்யூட்டர் அறிவியல் பயிலும் மாணவர் களின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.தமிழகத்தில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், முதுகலை கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர் தகுதி பெற்று, பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நலன் கருதியும், மாணவர்கள் நலன் கருதியும், அரசுப் பள்ளிகளில், காலியாக உள்ள, 809 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை, அரசு நிரப்ப வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.