WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 16, 2018

ஆசிரியர்களிடம் போலி சான்றிதழ் விசாரணை நடத்த குழு அமைப்பு.

அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர ஆசிரியர்கள் சிலர், போலி சான்றிதழ் அளித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

இதுகுறித்து, விசாரணை நடத்த, மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட, பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், ஓவியம், தையல், உடற்கல்வி, தோட்டக்கலை, இசை உள்ளிட்ட சிறப்பு பாட பிரிவுகளுக்கு, பாடங்கள் நடத்துகின்றனர். 
அதேபோல், மற்ற பாட பிரிவுகளுக்கும், தற்காலிக ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.இந்த ஆசிரியர்களில் சிலருக்கு, சரியான கல்வி தகுதி இல்லை என்றும், சிலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றுவதாகவும், கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார், பள்ளிக் கல்வி துறைக்கு புகார் அனுப்பியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும், குழுக்கள் அமைக்க, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர், சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

இந்த குழுக்களில், பாட வாரியாக கண்காணிப்பாளர்கள் மற்றும் நம்பகத்தன்மை மிகுந்த தலைமை ஆசிரியர்கள், தலா, 20 பேர் நியமிக்கப்படுகின்றனர். வரும், 28ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை, மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.