நிதி சார் கல்வி பாடத்துக்கு, இந்த ஆண்டு முதல், புத்தகத்துக்கு பதில், 'சிடி' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு, பட்ஜெட், நிதி ஆண்டு மற்றும் பங்குச்சந்தை உட்பட, நிதி சார் கல்வி திட்டத்தை அறிமுகம் செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய பங்குச் சந்தை நிறுவனம், சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கான பாட திட்டத்தையும், பங்குச் சந்தை நிறுவனம் தயாரித்தது.இதன்படி, நான்கு ஆண்டுகளுக்கு முன், நிதி சார் கல்வி பாட திட்டம், தமிழக பள்ளி கல்வியில் அறிமுகமானது. இந்த திட்டத்தில், 8, 9, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தனித்தனியே புத்தகங்கள் வழங்கி, பாடம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், நவ., - டிசம்பரில், இந்த பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், இந்த ஆண்டு முதல், நிதி சார் கல்வி திட்டத்தில், புத்தகங்கள் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், அனைத்து மாணவர்களுக்கும், 'சிடி' என்ற, குறுந்தகடாக பாட புத்தகம் தரப்படும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.அதேபோல, தேசிய பங்குச் சந்தை நிறுவனம் வழங்கும் பாடங்களை, பள்ளிகளில் கணினி வழியில் வழங்குமாறும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.