WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 14, 2018

வண்ண உடை அணிந்து வர மாணவர்களுக்கு இன்று சலுகை.

நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக பள்ளிகளில், குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுஉள்ளார்.தமிழக பள்ளி கல்வி சார்பில், குழந்தைகள் தின விழா மற்றும், எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளி வளாகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளிகளில் பல்வேறு தலைப்புகளில், ஓவியம், எழுத்து, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சீருடைக்கு பதில், வண்ண உடைகள் அணிந்துவர சலுகை அளிக்கப்பட்டுள்ளது.பல பள்ளிகளில் மாணவ, மாணவியரை மகிழ்ச்சிப்படுத்த, ஆசிரியர், ஆசிரியைகள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.