WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 9, 2018

பள்ளிகளுக்கு இலவச டி.வி.டி.,

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு மத்திய அரசு, இலவசமாக, டி.வி.டி.,க் களை வழங்குகிறது.இதுதொடர்பாக, பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட நிறுவனம், குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களை தயாரித்து வருகிறது.இந்த திரைப்படங்கள், பொழுது போக்குக்காக மட்டுமின்றி, குழந்தைகளிடத்தில், அற உணர்வை வளர்க்கவும் உதவுகின்றன.
இந்த நிறுவனம், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிட, இலவசமாக, டி.வி.டி.,க்களை வழங்குகிறது.டி.வி.டி.,களை பெற விரும்பும் பள்ளிகள், 044 - 2498 1159 என்ற, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.