WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 9, 2018

பொறியாளர் தேர்வு நடத்துவதில் இழுபறி.

மின் வாரியத்தில், 350 உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வை, யார் நடத்துவது என்பதில், இழுபறி ஏற்பட்டுள்ளது.
மின் வாரியத்தில், காலி பணியிடங்கள் அதிகம் உள்ளதால், பணிபுரியும் ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எழுத்து தேர்வு வாயிலாக, எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, மின் வாரியம், பிப்ரவரி, 14ல் வெளியிட்டது.இதற்கு விண்ணப்பிக்க, மார்ச், 6 வரை அவகாசம் வழங்கப்பட்டது. 
தேர்வுக்கு, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். பல மாதங்கள் ஆகியும், இதுவரை, எழுத்து தேர்வு நடக்கவில்லை.இதுகுறித்து, தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் கூறியதாவது:உதவி பொறியாளர் எழுத்து தேர்வை, அண்ணா பல்கலை வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டது. அந்த பல்கலையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, விசாரணை நடப்பதால், தற்போதைக்கு, தேர்வை நடத்த வாய்ப்பில்லை என, பல்கலை தரப்பில் கூறப்படுகிறது.
விரைவில், 20 சட்டசபை தொகுதிகளில், இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்தால், நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதனால், எழுத்து தேர்வை நடத்த, மேலும் தாமதமாகலாம். எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, விரைவில் தேர்வை நடத்தி, உதவி பொறியாளர்களை நியமிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.