WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 31, 2020

10ம் வகுப்பு தேர்வுக்காக 11ல் விடுதிகள் திறப்பு.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக, அவர்கள் தங்கிய விடுதிகளை, வரும், 11ம் தேதி திறக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், விடுதிகளில் தங்கியிருந்தனர். ஊரடங்கு காரணமாக, அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.தற்போது தேர்வு எழுத, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்பதால், விடுதிகளை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும், 11ம் தேதி முதல், விடுதிகளில், மாணவர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

தேர்வு முடியும், 25ம் தேதி மற்றும் அதற்கு பின், இரண்டு நாட்கள் வரை, விடுதிகளை திறந்து வைக்க, விடுதி காப்பாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.