WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 25, 2020

10ம் வகுப்பு தேர்வு பணிக்கு ஐந்து அதிகாரிகள் நியமனம்.

பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்த பணிகளை கண்காணிக்க, ஐந்து இணை இயக்குனர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட, ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன், 15ல் துவங்க உள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க, தமிழகம் முழுவதற்கும், ஐந்து இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு பள்ளி கல்வி துறையின் நிர்வாக பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இணை இயக்குனர்கள், நாகராஜ முருகன், ராஜேந்திரன், சுகன்யா, வாசு, கோபிதாஸ் ஆகியோர், 10ம் வகுப்பு தேர்வு பணிகளை கண்காணிக்கும் பணியில், மாவட்ட வாரியாக ஈடுபடுவர். ஒவ்வொரு அதிகாரிக்கும், ஆறு முதல், ஏழு மாவட்டங்களுக்கான தேர்வு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.விடைத்தாள் திருத்தம் துவங்கும் போது, அந்த பணிகளையும் கண்காணிக்க, இணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.