Sunday, May 31, 2020
பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பாடத்திட்டம் ஆய்வு செய்ய குழு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
''பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் அதற்கேற்ப பாட திட்டங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி திறப்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழுதான் முடிவு செய்யும். ஆண்டுதோறும் 210 நாட்கள் பள்ளி வேலை நாளாக இருந்த நிலையில் தற்போது வேலை நாட்கள் குறையும். எனவே பாட திட்டங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழு ஒரு மாத காலத்தில் தங்கள் அறிக்கையை அளித்த பின் பாடங்கள் குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.