கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ("சிடெட்') வரும் ஜன.31-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 5-இல் நடைபெறுவதாக இருந்த தகுதித் தேர்வு கரோனா பரவல் காரணமாக அடுத்த ஆண்டு ஜன.31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிடெட் தேர்வு ஜன.31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். மொத்தம் 135 நகரங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வெழுதும் நகரத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் நவ.7-ஆம் தேதி முதல் நவ.16-ஆம் தேதி வரை அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளலாம். தங்களுக்கு விருப்பமான நான்கு நகரங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். தவிர்க்க முடியாத சூழலில், இந்த நான்கு நகரங்களைத் தவிர்த்து வேறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இது குறித்து மேலும் தகவல் பெற www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.