WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 6, 2020

அச்சுறுத்தும் கொரோனா 2-வது அலை... பள்ளிகள் திறக்கும் முடிவைத் திரும்பப் பெறுமா தமிழக அரசு?

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்ட போதிலும், பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாகவும் அரசுகள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் காரணமாகவும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. தொடர்ந்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புக்கு நிலைக்கு நாடுகள் திரும்பி வருகின்றன. 'அப்பாடா கொரோனா ஓய்ந்தது' என சற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நிலையில், தற்போது இரண்டாம் அலை அடிக்கத் தொடங்கியிருக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

பிரான்சில் குறைந்திருந்த கொரோனா தாக்கம், தற்போது வேகமெடுக்கத் தொடங்கியதையடுத்து, அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை சற்றுக் குறைந்திருந்த கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. நாளொன்றுக்குப் புதிதாக 80,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
Representational Image

தமிழகத்தைப் பொறுத்தவரைத் தொடக்கத்தில் அதிகரித்துக் காணப்பட்ட பாதிப்பு சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. ஏழாயிரம் வரை சென்ற ஒருநாள் பாதிப்பு தற்போது இரண்டாயிரமாகக் குறைந்திருக்கிறது. தமிழகம் மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிய நிலையில், மத்திய அரசு புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அந்த அறிவிப்பில், கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை, அக்டோபர்15-ம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. மேலும், பள்ளிகளைத் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.