தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவது அல்லது ரத்து செய்வது குறித்து அதிகாரபூர்வ முடிவை முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பது எப்போது?
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் சில மாநில அரசுகள் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. கல்வித்துறை வட்டாரங்கள் சார்பாக ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையில் பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அன்றைய சூழல் வேறு, அப்போது கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது உள்ள சூழல் வேறு, அதில் அரசு சார்பில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக செய்துள்ளது எனவே பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும். அது குறித்த அறிவிப்பை முதல்வரிடம் ஆலோசனை வழங்கி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.