:''தமிழகத்தில் இந்தாண்டு 'பூஜ்ஜியம்' கல்வியாண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும்'' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகள் இயங்காததால் இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வியாண்டாக செயல்படுத்தும் வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டுத்தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும். நடப்பாண்டில் அரசு பள்ளியை சேர்ந்த 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.
பூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால்...
பூஜ்ஜியம் கல்வியாண்டு குறித்து கல்வித்துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் கற்பித்தல் பணி நடக்காததால் கடந்த கல்வியாண்டு முடிவில் எந்த நிலையில் மாணவர் இருந்தாரோ அதே நிலையில் அடுத்த கல்வியாண்டில் தொடர்வதை பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்றனர்.
குறிப்பாக 2019 -20 கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் 2021 - 22 கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு படிக்க நேரிடும். இம்முடிவை பள்ளி கல்வித்துறை மட்டும் தன்னிச்சையாக செய்ய முடியாது.உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறைகள் இணைந்து தொடக்க கல்வி முதல் முதுகலை படிப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்படி பூஜ்ஜியம் கல்வியாண்டாக அறிவிக்க வேண்டும்.
மாநிலம் வாரியாக இம்முடிவு எடுத்தாலும் முறையானதாக இருக்காது. நாடு முழுதும் ஒரே மாதிரி பூஜ்ஜியம் கல்வியாண்டு அமல்படுத்தினால் யாருக்கும் பாரபட்சம் இருக்காது.இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.