WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 28, 2020

10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!!

கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதில் குழப்பங்கள் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். மேலும் பூஜ்யம் கல்வியாண்டு குறித்தும் சில தகவல்களை அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. சில நாட்களுக்கு முன்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் பள்ளிகள் திறப்பில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் கொரோனா அச்சத்தால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அரையாண்டு, காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இம்முறையும் புதிய வகை கொரோனா பரவல், சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?? என்கிற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான பதிலை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

மேலும் பூஜ்யம் கல்வியாண்டாக நடப்பு கல்வியாண்டை அறிவிக்க வாய்ப்பில்லை எனவும் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவரின் புகைப்படம் காவி உடையில் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.