WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 3, 2021

ஆசிரியர் காலி பணியிட அட்டவணை ஜன., இறுதிக்குள் வெளியீடு; அமைச்சர்.

:''ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் குறித்த அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் அருகே கொங்கர்பாளையத்தில், அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை, தேர்தல் கமிஷன் வெளியிட்டதும், பொதுத் தேர்வுக்கான முடிவு மேற்கொள்ளப்படும். தேர்தல் சமயத்தில், சில பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக இருந்தால், அங்கு தேர்வர்கள் செல்ல வேண்டியிருக்கும். அதனால், தேர்தல் நாள் மற்றும் தேர்வு நாட்களை அறிந்து, பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும்.

தேர்தல் பணியில் விலக்கு கோர விரும்பும், 55 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் கமிஷனிடம் தெரிவித்தால்தான் சரியாக இருக்கும். தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப் படவில்லை. பள்ளி திறந்தபின், காலி பணியிடங்களை அறிந்து, ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த ப்படும். ஆசிரியர் காலிப்பணியிட அட்டவணை, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். கோவையில் கல்வி அதிகாரி, தனியார் பள்ளியில் நிதி பெற்றதாக, புகார் ஏதும் வரவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.