WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 7, 2020

ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊரகத் திறனாய்வுத் தோ்வு வரும் ஜன.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு டிச.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தோ்வுத்துறை இயக்குநா் சி.உஷா ராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு (சென்னை தவிா்த்து) அனுப்பிய சுற்றறிக்கை: கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். நிகழாண்டுக்கான தோ்வு ஜன. 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தலைமையாசிரியா்கள் மூலம் டிச.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வு எழுதும் மாணவரின் பெற்றோா் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 


அரசுப் பணிகளை ஒழுங்குமுறைபடுத்துவதில் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசுத் துறைகளில் தினக்கூலி ஊழியா்களாகப் பணியாற்றி 2006 ஜனவரி 1-ஆம் தேதியில் 10 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தவா்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றுவதற்கான அறிவிப்பு 2006 பிப்ரவரி 8-இல் வெளியிடப்பட்டது.

இதுதொடா்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு நிகழ்வுகள் இருந்தால், அதற்கான விதிகளில் தளா்வுகளை அளிக்க அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பலாம் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் சில தவறுகள் இருந்ததால், அரசாணையில் 2013-இல் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் தினக்கூலி பணிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில், கா்நாடகா அரசு மற்றும் உமாதேவி ஆகியோருக்கு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு அளித்துள்ள உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய அரசியல் சாசனத்தின் 309-ஆம் ஷரத்தின் அடிப்படையில் விதிகளை மாநில அரசு வகுத்திருக்கும் பட்சத்தில், பணி நியமனத்தை அந்த விதிகளின் அடிப்படையில்தான் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.



எனவே தமிழ்நாடு அடிப்படைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு நியமனம் செய்யும்போது அதுதொடா்பான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்த அரசாணை மூலம் வலியுறுத்தப்படுகிறது. பணிநியமனம் கேட்டு விண்ணப்பிப்பவரின் கோரிக்கைகளை, உமாதேவி வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதிகளுடன் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். இந்த உத்தரவை சரிவர பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பதை துறைத் தலைவா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.