WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 3, 2021

கேட் 2020 தேர்வு முடிவுகள் வெளியீடு: ஐஐஎம் இந்தூர் வெளியிட்டது.

ஐஐஎம் கேட் தேர்வு முடிவுகளை இந்தூர் இந்திய மேலாண்மை நிறுவனம் இன்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ளது.

தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் சேர கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு, நாடு முழுவதும் நவம்பர் 29-ம் தேதி நடைபெற்றது.




இந்தத் தேர்வு 159 நகரங்களில் 430 தேர்வு மையங்களில் 3 ஷிஃப்டுகளில் நடைபெற்றது. கேட் தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதினர். கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு 96.15 சதவீதத் தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டன. இதற்கிடையே தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியலைக் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஐஐஎம் இந்தூர் வெளியிட்டது.

இதை அடுத்து, ஜனவரி முதல் வாரத்தில் கேட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கேட் தேர்வு முடிவுகளை இந்தூர் இந்திய மேலாண்மை நிறுவனம் இன்று (ஜனவரி 2) மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது.



https://iimcat.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளைக் காணலாம்

வழக்கமாக தேர்வு நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும். இம்முறை தேர்வு நடைபெற்ற ஒரு மாதத்திலேயே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.