WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 3, 2021

கணினி ஆசிரியர் பணி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு – 24 பணியிடங்கள் காலி!!

 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணி நியமனம் இன்று நடைபெற்றது. அதில் 24 இடங்களுக்கான நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கலந்தாய்வு:

தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்களாக நியமிக்க அரசு முடிவு செய்தது. இதற்காக 742 பணி இடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.

NMMS கல்வி உதவித்தொகை தேர்வு அறிவிப்பு – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

கணினி ஆசிரியர் பணி நியமனம்:

742 பணி இடங்களில் 1 முதல் 400 வரை வரிசைப் பட்டியலில் உள்ளவர்கள் ஜனவரி 2ம் தேதியும், 401 முதன்மை 742 வரை பட்டியலில் உள்ளவர்களுக்கு ஜனவரி 3ம் தேதியும் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் அனுமதிச்சீட்டு, அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித் தகுதியை பல்கலைக்கழகம் நிர்ணயிக்கலாம் – நீதிமன்றம் உத்தரவு!!

பணி நியமனம் நிறுத்தி வைப்பு:

இன்று நடைபெற்ற முதல் நிலை கணினி ஆசிரியர் பணி நியமனத்தில் 718 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 24 பேரின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதனால் இந்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.