தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக துணை ஆட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள தேர்வுக்கான முக்கிய வழிமுறைகளை தேர்வு கட்டுப்பாடு அலுவலர் வெளியிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 66 காலியிடங்களுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வெழுத உள்ளனர். தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க புதிய வழிமுறைகளை தேர்வு கட்டுப்பாடு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டார். இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் மதிப்பெண்ணில் 5 மார்க் கழிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “குரூப் 1 தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கவுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும். 9.15 பிறகு வரும் தேர்வர்களை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். ஓஎம்ஆர் தாளில் கருப்பு மைகொண்ட பந்து உருண்டை முனை பேனா கொண்டு எழுத வேண்டும். விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு, இடதுகை பெருவிரல் ரேகையினைப் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி – மதுரை காமராஜ் பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு!!
மேலும் விடைத்தாளிகளில் புதிதாக இ பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. விடை தெரியாத கேள்விகளுக்கு இ பிரிவு கருப்பு மை கொண்டு குறிக்க வேண்டும். தேர்வு முடித்த பின் எதனை வினாக்கள் தெரிந்தவை எத்தனை வினாக்கள் தெரியாதவை என்று குறிப்பிட்ட இடத்தில குறிக்க வேண்டும். இதனை தேர்வர்கள் மறந்து குறிக்காமல் விட்டுவிட்டால் 5 மதிப்பெண்கள் மைனஸ் செய்யப்படும். இதனை செய்வதற்கு கூடுதல் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது 1 முதல் 1.15 இந்த வேலைகளை செய்ய வேண்டும். தேர்வினை முடித்தபின் அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்து பின் தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் இதில் ஏதேனும் தவறு நடைபெறும் சூழ்நிலையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்,” என அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.