பஞ்சாப் அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
இந்தியாவில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2004ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தில் எந்த ஒரு பலனும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் கிடைப்பதில்லை. அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல் பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தால் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக 3வது மாநிலமாக இம்மாநிலம் திகழும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.