தற்போது மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த மாவட்டத்தினர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கட்டாய விடுப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெண்படல சுழற்சி எனப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் வேகமாக பரவக் கூடியது என்பதால் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது. மேலும் சென்னையில் கடந்த வாரத்தில் எழும்பூர் மருத்துவமனைக்கு தினசரி 5 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 50 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து மற்ற தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மெட்ராஸ்-ஐ காற்று மூலமாக பரவுவதால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன் மாவட்டத்தில் வேகமாக மெட்ராஸ் ஐ நோய் பரவி வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.