தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கிடையே கற்றல் மற்றும் கற்பித்தலில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பிள்ளது.
மனநல ஆலோசனை மையம்:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றின் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் தொடங்கப்பட்ட போதிலும், மாணவர்களுக்கிடையே கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு வகையான நடவடிக்கைகளை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
இதில் குறிப்பாக 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையின் அடிப்படையில் மனநல ஆலோசனையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில மதுரை உயர்நீதிமன்ற கிளை மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த மொபைல் மனநல ஆலோசனை மையம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமானது ஒன்று எனவும் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 2012ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை மையம் அமைத்து ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.