WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 31, 2023

தமிழக உயர்கல்வித்தரம் குறைந்ததற்கு காரணம் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளருக்கு வழங்கும் குறைவான ஊதியமா?

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி ஏராளமான அரசு பள்ளிகளும் அரசு கல்லூரிகளும் கல்வித்தரம் குறைந்து காணப்படுகிறது. 




அரசு ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் தனியார் பள்ளிகளை நோக்கியும் தனியார் கல்லூரிகளை நோக்கியும் மாணவர்கள் நாடுவதற்கான காரணம். மாணவர்களுக்கு தேவையான தரமான கல்வியையும் அதனுடன்  படிப்பு நிறைவடையும் தருவாயில் வேலைவாய்ப்பையும் ஒரு சில அரசு கல்வி நிலையங்களை தவிர்த்து பெரும்பாலான அரசு  கல்லூரியில் பூர்த்தி செய்ய மறுக்கின்றன. இந்தத் தேவையை பெரும்பாலும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் மட்டுமே செம்மையாக செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசு கல்வித்துறைக்காக ஏராளமான நிதியினை ஒதுக்கினாலும் தமிழகத்தினுடைய கல்வித்தரம் உயர்ந்த பாடில்லை. இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது கல்வி கற்கின்ற மாணவனுக்கு செய்யப்படுகின்ற சலுகைகள் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்துமே தவிர தரத்தினை உயர்த்தாது . ஏனெனில் தமிழக அரசு நிதி பற்றாக்குறை என்று தொடர்ந்து சாக்குபோக்கு சொல்லாமல் பள்ளிகளிலும் அரசு கல்லூரிகளிலும்  பணியாற்றி வருகின்ற தற்காலிக பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுப்பதற்கு   முன் வர வேண்டும்   என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின்  மாநிலத் தலைவர்  தங்கராஜ்  சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  எவ்வளவு தரமான பொருட்களை கொடுத்தாலும் உரிய  சம்பளம் கொத்தனாருக்கு  கொடுத்தால் மட்டுமே கட்டிடம் தரமாக இருக்கும். அதே போன்று தான் தமிழகத்தில் உயர்கல்வியில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7198 காலி பணியிடங்களில் சுமார்  7050 நபர்கள் அதாவது 70% தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்றைய தேதி நிலவரப்படி   இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்காக வழங்கப்படுகின்ற ஊதியம் மிக மிக குறைவு. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் இவர்களுக்கு வழங்கப்படுகின்ற 20000 சம்பளம் கிட்டத்தட்ட காவல்துறையில் பாதுகாத்து வளர்க்கப்படும் நாய்களின் பராமரிப்பு செலவுக்கு ஈடானது தான். 13 வருடத்திற்கு முன்னாள் யுஜிசி வகுத்துள்ள சம்பளத்தை 2010 ஆம் ஆண்டு  ஆறாவது ஊதிய குழுவின் படி யுஜிசி பரிந்துரைத்த மாத சம்பளம் 25000 பெற பத்து வருடத்திற்கு மேலாக யுஜிசி தகுதி உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் போராடி வருகிறார்கள். தற்போது ஏழாவது ஊதிய குழுவின் படி அதாவது 2009 ஜனவரி மாத நிலவரத்தின் படி 50 ஆயிரம் மாத சம்பளமாக வழங்க வேண்டும். தமிழக அரசு முறைகேடாக வந்தவர்களுக்கு போலிச் சான்று கொடுத்து மட்டுமே பணியில் சேர்ந்த அண்ணாமலை  பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அரசுக்கு நிதி உள்ளது. பல்கலைக்கழக ஊழலை விசாரிப்பதற்கு குழு அமைப்பதோடு சரி. அறிக்கை வந்த பாடு இல்லை. குழு அமைப்பது ஒருவேளை ஊழல் செய்த நபரிடம் கமிஷன் கேட்பதற்காக என தெரியவில்லை. இதுவரை எந்த அறிக்கையும் வெளியேே வரவில்லை. பல்கலைக்கழக நியமன முறைகேட்டில் சிக்கிய எந்த ஊழல்வாதியும் தண்டிக்கப்படவில்லை. அண்ணாமலைை பல்கலைக்கழகத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டவர்கள் கௌரவ விரிவுரையார்களைை விட ஐந்து மடங்கு ஆறு மடங்கு  ஊதியம் பெற்று வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தற்காலிக மிகை பணியாளர்கள் என்ற பணி நிலையில் ஒப்பந்த பணியாளராக  தான் உள்ளனர். இவர்கள் தமிழக உயர்கல்வித்துறைக்கு 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தான் பணி நிரவல் என்ற பெயரில்  மூன்று வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிக பணியாளராக இருந்தாலும் கூட நிரந்தர பேராசிரியர்களுக்கு இணையாக ஒரு லட்சத்துக்கு ஒன்றரை லட்சத்திற்கு அதிகமாக ஊதியம் பெறுகின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி பரிந்துரைத்த மாத சம்பளம் 50 ஆயிரம் வழங்காமல் 20,000 மட்டுமே  தமிழக அரசு ஊதியமாக வழங்கி வருகிறது. மாறி மாறி ஆட்சி நடத்துகின்ற ஆட்சியாளர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழலை மறைப்பதற்கு ஏதுவாக   முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு துணை போகின்ற வகையில் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒரு பெரிய தொகையினையும், அங்கு பணியாற்றி வரும் தற்காலிக பணியாளரிடம் ஒரு பெரிய தொகையினையும் ஒவ்வொரு மாதமும் ஊதியம் போடுவதற்காக மறைமுகமாக வசூலித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மட்டும் அரசிடம் பணம் இல்லை என தெரிவித்து வருவது வேதனை அளிக்கின்றது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கடன் தொல்லைகளாலும் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாததாலும் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை இறந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் இறந்ததற்கு ஒரு ரூபாய் கூட அரசு சார்பில் வழங்கியது இல்லை. கள்ளச்சாராயம் குடித்து இருந்தால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தெரிந்திருந்தால்  கூட அந்த கௌரவ விரிவுரையாளர்கள்  விஷமது  குடித்தாவது இறந்திருப்பார்கள்.    ஏனெனில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசுப் பள்ளியிலும் அரசு கல்லூரியிலும் கடினமாக பயின்று முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்து வந்த கௌரவ விரிவுரையாளர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. ஏராளமான ஏழை கௌரவ விரிவுரையாளர்களுக்கு நேர்மையான முறையில் நான்கு ஐந்து பட்டங்கள்  வாங்க தெரிந்ததே தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் தமிழக அரசு நிதியில்லை நிதியில்லை என்று கூறி அரசு கல்லூரியில்  கௌரவ விரிவுரையாளர்களை கொத்தடிமையாளாக   விட கேவலமாகவும் காவல்துறையால் பராமரிக்கப்படுகின்ற நாய்களை விட கேவலமாகவும் நடத்தி வருகின்றது. தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசும் மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசும் போட்டி போடுவது ஒருபுறம் இருந்தாலும் இங்கு பணியாற்றி வருகின்ற தற்காலிக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி பரிந்துரைத்த சம்பளத்திற்கு இணையாக முதலில் முறையான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களையும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் தமிழக நிதித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கைை வைக்கப்பட்டுள்ளது. 
 பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திமுக அரசும் அதிமுக அரசும்* மாறி மாறி  *கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்* என தேர்தல் வாக்குறுதி கொடுத்ததும், கௌரவ விரிவுரையாளர்கள் போராட்ட சமயத்தில் கௌரவ விரிவுரையாளர்களிடத்தில் வாக்குறுதி கொடுத்ததும் இன்று வரை வெற்று காகிதங்களாக தான் கௌரவ விரிவுரையாளர்கள் கையில் இருக்கிறது. எந்த ஒரு நாட்டில் கல்விற்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் தரபடுகின்றதோ அந்த நாடு மட்டுமே சிறந்த நாடாக  திகழும். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கல்விக்கும் அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கும் பொதுவான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை கண்காணிக்கின்ற யுஜிசி ஏ ஐ சி டி இ போன்ற அமைப்புகளும் சரியாக கண்காணிப்பு செய்யாமல் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். யுஜிசி விதிமுறைப்படி ஒழுங்காமல் நடத்தப்படாத கல்வி நிலையங்களை இழுத்து மூடாமல் அது போன்ற மாநிலத்தின் இயங்கி வருகின்ற பல்கலைக்கழகங்களின் பட்டங்களை அங்கீகரிக்காமல் ஆணை பிறப்பித்தால்தான் கல்வி வளர்ச்சி பெறும். அதனால்தான் என்னவோ தெரியவில்லை.தமிழகம் கல்விக்கும் குறிப்பாக கல்வி கற்பித்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை. குறிப்பாக *தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குறைந்த தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்ற கௌரவ விரிவுரையாளர்கள் வயிற்றில் பசியுடன் மாணவர்களுக்கு பாடத்தினை சொல்லித் தருகிறார்கள்* . இதனை ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் மேலும் ஆட்சியாளர்களை  வழிநடத்தி வருகின்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் நீதி வழங்குகின்ற நீதிமன்றங்கள் இருப்பின் அங்கே நேர்மையான நீதிமான்கள் இருப்பின் அவர்கள் தாமாக முன்வந்து தமிழகத்தில் உள்ள தற்காலிக பணியாளர்களின் ஊதியத்தைப் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் நீதியை கூட விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கின்றது. இதில் தமிழகம் முதலிடம் இருக்கின்றதோ என சில சமயங்களில் அஞ்சத் தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது. ஆனால் ஆசிரியர்களின் வழக்கு கால நீட்டிப்பு செய்கின்றது. இது எவ்வளவு கேவலமாக உள்ளது என சொல்லத் தேவையில்லை. பட்டப்படிப்புகள் ஒரு வேலை தொலைதூரக் கல்வியாக இருந்தால் நீதி விரைந்து கிடைப்பதற்கு தற்காலிக பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. போதிய ஊதியம் இல்லாததால் குடும்பத்து உறவினர்களின் தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர். குடும்பத்தினரிடம் உரிய மரியாதை கிடைக்காமல் குடும்பங்களை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  ஒவ்வொரு ஆசிரியரும் பேனாவினை எடுப்பதற்கு பதிலாக.      
( ஊட்டி அரசு கல்லூரி தமிழ் துறை கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிய கவிஞர் போன்றவர்கள்) தமிழகத்தில்  மது பாட்டிலை எடுத்து தற்கொலை என்ற பெயரில் மரணத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  சம்பளம் கொடுப்பது அரசின் கொள்கை முடிவு என்றால் அப்படிப்பட்ட அரசு ஏன் பணியாளருக்கு விஷத்தை கொடுத்து கருணை கொலை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளனர்.        அது மட்டுமல்லாது இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டக்கூடிய  மாநிலமாக  
(தமிழகம் இரண்டாவது இடத்தில்)  இருந்தாலும் கூட கடன் வாங்குகின்ற மாநிலத்தில் முதல் மாநிலமாக திகழ்வது ஏன் என தெரியவில்லை.  ஆயினும் இத்தனை வருடங்களாக போடுகின்ற நலத்திட்டங்களும் மாநிலத்திற்கு கிடைக்கின்ற வருவாயும் அதனையும் மீறி வாங்குகின்ற கடன் தொகையும் இதுவரை மாநிலத்தில் உள்ள மக்களுக்கு குறிப்பாக ஆசிரியர்களுக்கு கௌரவ விரிவுரையாளர் உள்ளிட்ட தற்காலிக பணியாளர்களுக்கு திருப்தி படுத்தவில்லை. ஏனெனில் இந்தியாவில் இன்றைய தேதியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குகின்ற மாநிலம் தமிழகம் தான். குறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு வயிற்றில் பசி உணர்வுடன்  மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை போதிப்பார்கள் எவ்வாறு அடுத்த மாணவர் சந்ததியை எங்களைப் போன்று நன்றாக படியுங்கள் என்று கூற முடியும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் பெருமைக்காக அரசு கல்லூரிகளை தொடங்கி வருகின்ற தமிழக அரசு, போதிய அடிப்படை வசதி இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கையை அதிக அதிகரித்து வரும் தமிழக உயர்கல்வித்துறை அதற்கேற்றார் போல் அங்கு பணியாற்ற போதுமான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்திற்கு  கடந்த ஆட்சியாளர்களைப் போல் இல்லாமல் இந்த அரசின் கடந்த காலங்களை போல் இல்லாமல் இனி வரும் காலங்களில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றுகின்ற தற்காலிக ஆசிரியர் பணியாளர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முதலில் சம வேலைக்கு சம ஊதியம் முக்கியத்துவம் தர வேண்டும். அவர்களில் தமிழக அரசின் அளவுகோலின் படி நீண்ட ஆண்டுகளுக்கு  மேலாக தமிழக அரசின் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை படிப்படியாக பணி வரன்முறை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.