பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் செய்தியாளகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிவைக்கப்படுமா என்கிற எதிா்பாா்ப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாா்.
இந்த நிலையில், இன்று அவர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.