இந்தியாவில் 5க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநில கல்வி முறையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களும் ஒன்று. தமிழ்நாட்டில் இந்த கல்விமுறையில் படித்தாலும் மாணவர்களுக்கு தமிழ் என்பது தேர்வு மொழியாகவே இருந்து வருகிறது.
தனியார் பள்ளிகள் இயக்குனர் அறிக்கை
இந்நிலையில் தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாயமாக்கி உள்ளது பள்ளிக்கல்வித்துறை. இதையொட்டி, அனைத்து தனியார் பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டே வந்த சட்டம்
கடந்த 2006 முதலே தமிழ்பாடம் கட்டாயம் என்ற விதி இருந்தும் தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி மீண்டும் அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்தாண்டு முதல் கட்டாய தமிழ்
அந்த கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் அனைவரும் தற்போது பத்தாம் வகுப்பை எட்டியுள்ள நிலையில் 2024 - 2025 கல்வியாண்டின் பொது தேர்வில் கண்டிப்பாக அனைத்து தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தமிழ் பாடத்தை எழுத வேண்டும். அவர்களுக்கென தனியார் பள்ளிகள் முறையான பாடத்திட்டத்தை தயார் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.