மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையில் வரும் மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் மொத்தம் 60 காலிபணியிடங்கள் உள்ளன. பதவி உயர்வு, பணியிட மாறுதல் மூலம் அவற்றை நிரப்ப தகுதியான தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 2 பேர் பணி ஓய்வு பெற்றனர். எஞ்சிய 34 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. இதேபோல, 24 மாவட்டகல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.