கல்வித்துறையால் அனுமதிக்கப்படாத ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்குமாறு எந்த கல்லுாரியும் கட்டாயப்படுத்தக்கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை திருப்பாலை யாதவா கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரி. இங்கு 2024 ஜூலை 11ல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தனி நபரை முன்னிலைப்படுத்தி, அவரது படம் அச்சிடப்பட்ட 'டீ-சர்ட்'களை அணியுமாறு மாணவியர் கட்டாயப்படுத்தப்பட்டனர். மாணவர்கள் 'மாவீரன் அழகுமுத்துக்கோன்,' என அச்சிடப்பட்ட 'டீ-சர்ட்'களை அணிந்திருந்தனர்.
கல்லுாரி வளாகத்தில் பேனர்கள், போஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன. ஒரு தனி நபரை புகழ்வதற்காக மாணவர்களிடம் அமைதி, நல்லிணக்கம் பாதிக்கப்பட்டது. இன்று (ஜூலை 11) அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா கல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது. எந்த ஒரு தனி நபரையும் ஊக்குவிக்கும் போஸ்டர்கள், பேனர்கள் இடம் பெறக்கூடாது. மாணவர்களின் அமைதி, நல்லிணக்கம் பாதிக்கப்படாதவாறு விழா நடத்த வலியுறுத்தி கல்லுாரிக் கல்வி இயக்குனர், இணை இயக்குனர், திருப்பாலை போலீசாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.