தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-இல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 19-ம் தேதி தொடங்க வைக்க உள்ளார். இந்நிலையில், மாணவர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக, விடுமுறையை முடித்து கல்லூரிக்கு திரும்பியதும் விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக Perplexity Pro AI வசதி 6 மாதக் காலத்திற்கு மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்பட உள்ளது.
Saturday, December 20, 2025
புத்தாண்டு விடுமுறை முடித்து வரும் மாணவர்களுக்கு கையில் லேப்டாப்.
கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
தமிழ்நாட்டில் முதன் முறையாக 2011-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கொரானா காலத்தில் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், 2025 ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பணிக்கான திறன் வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ளும் விதமாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியின் முதன்மையான தேவையாக உள்ள கணினி திறனை பெறும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கல்லூரியை முடித்து, வேலைக்கு தயாராகும் மாணவர்களுக்கும், மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
மடிக்கணினி விநியோகம்
2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் என்ற விதம், இந்த கல்வி ஆண்டில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முன்னணி நிறுவனங்களான டெல், ஏசர் மற்றும் எச்பி ஆகிய நிறுவனங்களில் மடிக்கணிகள் மாணவர்கள் வழங்கப்பட உள்ளது. நல்ல திறனும், அதிக பேட்டரி வசதியுடன் உள்ள மாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பட்டப்படிப்புகளை பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவர்களுகு மடிக்கணினிகள் வழங்கப்படும்.
டிசம்பர் 19-ம் தேதி விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட வாரியாக மடிக்கணினிகள் அனுப்பப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.