அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் போட்டித் தேர்வு கடந்த டிச.27-ம் தேதி நடைபெற்றது. காலையில் நடந்த தேர்வுக்கான (தாள் 1-ல் பகுதி-ஏ மற்றும் பகுதி-பி) உத்தேச விடைக்குறிப்புகள் (கீ ஆன்ஸர்) https://trb1.ucanapply.com என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் மீது ஆட்சேபம் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் ஜன.13 மாலை 5.30 மணி வரைபதிவுசெய்யலாம். சான்று ஆவணங்கள் இல்லாத முறையீடுகள் பரிசீலிக்கப்படாது. அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை மட்டுமே ஆதாரமாக அளிக்க வேண்டும். பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது. இணையவழியில் இல்லாமல் தபால் அல்லது பிறவழி முறையீடுகள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.