ஏப்ரல் மாதம் நடைபெறும் ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் பிப்.25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இது இரு பிரிவாக நடத்தப்படும். இதில் முதன்மைத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டமாக நடத்துகிறது.
அதன்படி, 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜன.21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் பிப்.12-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதை தொடர்ந்து, ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு ஏப்.1 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது.விருப்பம் உள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக பிப்.25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்கட்ட தேர்வை எழுதியவர்களும் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் கூடுதல் தகவல்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.