WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 28, 2026

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு: முதல்கட்டமாக 5 பாடங்களுக்கான முடிவு வெளியீடு.

 

 அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முதல்கட்டமாக 5 பாடங்களுக்கான முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2025-ம் ஆண்டு டிச.27-ம்தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வை 42 ஆயிரத்து 64 பேர் எழுதினர்.

மொத்தம் 48 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் தற்போது முதல்கட்டமாக வரலாற்றுக் கல்வி, மனித உரிமைகள், இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, கடல்வாழ் உயிரியல், வனஉயிரியல் ஆகிய 5 பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப் பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (https://trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு காலியிடத்துக்கு 3 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 23-ம் தேதியும்,நேர்முகத்தேர்வு 24-ம் தேதியும் நடைபெறும். இதற்கான அழைப்புக்கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.